வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

முளைத்தால் மரம்; இல்லையேல் உரம்..!!



நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்குத் தகுதியானது உங்களுக்குக் கண்டிப்பாகக் கிடைத்தே தீரும்.
முயற்சயை
விதைத்துக் கொண்டே இரு.
முளைத்தால் மரம்; இல்லையேல் உரம்..!!.


வியாழன், 3 ஆகஸ்ட், 2017

மகிழ்ச்சியும்... சோகமும்.....



மகிழ்ச்சியும்... சோகமும்.....

உங்கள் சோகங்களை
மணலில் எழுதுங்கள்
மறைந்து போகட்டும்....
உங்கள் மகிழ்ச்சியை
கல்லில் செதுக்குங்கள்..
என்றும் நிலைத்திருக்கும்..

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

வாழ்க்கைத் தத்துவம்



வாழ்க்கைத் தத்துவம்

தெரிந்து மிதித்தாலும்........ தெரியாமல் மிதித்தாலும்....... மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.

 நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை................
 அழகாய் அமைந்த வாழ்க்கையைக் கூட ........................சிலருக்கு வாழத் தெரிவதும் இல்லை..!

 'சந்தோஷமா வாழறேன்' னு காட்டிக்கொள்ள தான் பணம் தேவைப்படுகிறது.. ............
உண்மையில், சந்தோஷமா வாழ பணம் ஒரு பொருட்டே இல்லை...........

 நோய் வரும் வரை உண்பவன்............உடல் நலமாகும் வரை....... உண்ணாதிருக்க வேண்டி வரும்!

பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல... ...............
ஆனால் செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..............!

 பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா?..
செலவு செய்யுங்க..........!

 உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?..
கடன் கேளுங்க..............!

 பிச்சை போடுவது கூட சுயநலமே............... புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்...

 அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை...................ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.

 வாழ்க்கையில் கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு.. ................
அதற்கு அவமானம் தெரியாது...............
 விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்.............!!

 வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்".

 வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்"


 திருமணம் -
ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்............................
 ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது.................!!
 
 முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள்,....................
 பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள்.............
 அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.
 
 மீண்டும் ஒரு முறை முகம் பார்த்து பேசவேண்டியிருக்குமே...........................என்ற ஒரு காரணத்திற்காகவே...................... நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன..
 

 நேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை.
 

 இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட.................... வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்..............!

பகலில் தூக்கம் வந்தால்.................உடம்பு பலவீனமா இருக்குனு அர்த்தம்.............!!
 இரவு தூக்கம் வரலைனா..................... மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்...........!


 துரோகிகளிடம் 'கோபம்' இருக்காது.............
 கோபப்படுபவர்களிடம் 'துரோகம்' நிச்சயமாக இருக்காது..
   

 தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள.................... அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும்............................ எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது............


வெள்ளி, 14 ஜூலை, 2017

ஆசை



ஆசை

இன்று என் ஆசைகளை நிறைவேற்றினால்
 நாளை வேறு ஒன்றை கேட்பேன் என்பதாலோ என்னவோ
 நான் கேட்பதை கடவுள் கொடுப்பதே இல்லை..!!!

புதன், 12 ஜூலை, 2017

தினமும் ஏன் இந்த ஓட்டம்?..


தினமும் ஏன் இந்த ஓட்டம்?..

 *என்று சலிப்புடன் கடிகாரம் பார்த்தேன்,* *அது என்னிடம் கேட்டது,* *நான் ஓடா விட்டால் என்ன செய்வாய்.*
  *நான் தூக்கி எறிந்து விடுவேன் என்றேன்*
  *அதற்கு அது கூறியது* *"நீயும் ஓடா விட்டால் இந்த உலகம் உன்னை தூக்கி எறிந்து விடும்"*
  *That is LIFE.*

வெள்ளி, 23 ஜூன், 2017

தேடல்...



தேடல்...

தொலைத்தலில்
இல்லை …
தேடலில் உள்ளது
வாழ்க்கை ...


வியாழன், 22 ஜூன், 2017

மறதி



மறதி..

துன்பத்திற்கு காரணம்

மறக்கக்கூடாததை மறப்பதும்..

மறக்கவேண்டியதை மறக்காமல் இருப்பதும்தான்...

   

திங்கள், 19 ஜூன், 2017

உண்மையான அன்பு ..



உண்மையான அன்பு ..

உண்மையான அன்பை
சொல்லி புரியவைக்க முடியாது  
அந்த அன்புக்கு
உரியவர்கள் மட்டுமே
உணர முடியும் …!

புதன், 14 ஜூன், 2017

வரம்


வரம்

நம் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் ஆயிரம் உறவுகளை விட .,
நம் கண்ணீரைப் புரிந்து கொள்ளும்
ஒரே ஒரு உறவு கிடைப்பது வரமே ...

செவ்வாய், 6 ஜூன், 2017

வாழ்க்கை


வாழ்க்கை...
                  தானாக உயரும்
                       *வயது*!
                விடாமல் துரத்தும்
                      *காலம்*!!
                 தடுக்க முடியாத
                      *நேரம்*!!!
               கடக்கத் துடிக்கும்
                    *இளமை*!!!!
              காலைத் தடுக்கும்
                    *சமூகம்*!!!!!
               தொடவேண்டிய
                   *இலக்கு*!!!!!!
       இத்தனை போராட்டம் தான்
                 *வாழ்க்கை*!!!!!!!