மனிதன்
உணவின்றி
40 நாட்களும்
நீரின்றி
3 நாட்களும்
காற்றின்றி
3 நிமிடமும்
உயிர் வாழலாம்.
ஆனால்
நம்பிக்கையின்றி
3 நொடிகூட
வாழ இயலாது.
அடக்கம்
நல்லதுதான்.
ஆனால்
அது
அடிமைத்தனமாக
இருக்கக் கூடாது.
சொற்கள்
நம் சிறந்த
உடைகள்
அவற்றைக்
கந்தலாகவும்,
கிழிசல்களாகவும்,
அழுக்காகவும்
உடுத்தக் கூடாது.
சுமை
அதிகமாகத்
தோன்றத் தோன்ற
நீங்கள்
மேலே
ஏறிக்
கொண்டிருக்கிறீர்கள்
என்று பொருள்
தாமரையிலையிலே
உருண்டோடும்
பனித்துளி
போன்றது
மனித
வாழ்க்கை.