புதன், 31 அக்டோபர், 2012

நிலையான‌து,


அன்பு
ப‌ன்பு
பாச‌ம்
நேச‌ம்
எல்லாம்
நிலைய‌ற்ற‌து...
மாற்ற‌மும்
ஏமாற்றமும்
என்றும்
நிலையான‌து..!

திங்கள், 22 அக்டோபர், 2012

அம்மா...


ம‌ர‌ணமே 
வ‌ந்தாலும் 
அவ‌ளை 
ம‌ற‌வாத‌ 
ம‌ன‌ம் 
வேண்டும்...
மீண்டும் 
ஜ‌ன‌ன‌ம் 
என்றாலும் 
அதிலும் 
அவ‌ளே 
வேண்டும்...
உற‌வாக‌ 
அல்ல‌ 
என் 
உயிராக‌... 
அவ‌ள் 
தான் 
என் 
தாய்...

புதன், 22 ஆகஸ்ட், 2012

சமையல்


எப்படி 
வேண்டுமானாலும் 
சமையல் 
செய்யுங்கள்.
ஆனால் 

அன்புடன் 
பரிமாறுங்கள்...!

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

க‌ன‌வு



ந‌ம்பிக்கையான‌ 
க‌ன‌வுக‌ளில் 
இருந்துதான் 
பொறுப்புக‌ள் 
ஆர‌ம்ப‌மாகின்ற‌ன‌...!

தோல்விக‌ள்..!



உல‌கில் 
க‌ற்றுக்
கொள்ள‌ 
இன்னும் 
நிறைய‌ 
இருக்கிற‌து 
என்னை 
எச்ச‌ரித்துக்
கொண்டிருக்கிற‌து 
என் 
தோல்விக‌ள்..!

புதன், 8 ஆகஸ்ட், 2012

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

வீர‌ம்.


கோப‌த்தை 
க‌ட்டுப்ப‌டுத்துவ‌தும்,
தாம‌த‌ப்ப‌டுத்துவ‌துதான் 
வீர‌ம்.

செவ்வாய், 10 ஜூலை, 2012

உரிமை



உங்க‌ளுக்கு 
என்ன‌ 
உரிமை 
வேண்டுகிறீர்க‌ளோ, 
அதையே 
பிறருக்கு 
அளியுங்க‌ள்..!

வியாழன், 28 ஜூன், 2012

உத‌டுக‌ள்..!







ம‌வுன‌மாக‌ 
இருந்த‌ 
இருந்த‌ 
போது 
ச‌ந்தித்தோம்,
பேசும் 
போது 
பிரிந்து   
விட்டோம்..!

திங்கள், 28 மே, 2012

முய‌ற்சி


முய‌ற்சிக்கு
 நீங்க‌ள் 
அடிமை 
என்றால், 
உல‌க‌ம் 
உங்க‌ளுக்கு 
அடிமை..!

வெள்ளி, 25 மே, 2012

இந்த‌ நிமிட‌ம்



துன்ப‌திலும்,
இன்ப‌த்திலும்,
நீங்க‌ள்
 நினைவு
கொள்ள‌
வேண்டிய‌
ஒரே
விஷ‌ய‌ம்...
"இந்த‌
 நிமிட‌ம் 
 நிர‌ந்த‌ர‌ம்
  இல்லை"

செவ்வாய், 8 மே, 2012

ப‌த‌வி



ப‌த‌வி 
உங்க‌ளுக்குப் 
பெருமை 
தாருவ‌தை 
விட‌ 
நீங்க‌ள் 
தான் 
அதைப் 
பெருமைப்ப‌டுத்த‌ 
வேண்டும். 

புதன், 2 மே, 2012

தேனீ


சொற்க‌ள் 
தேனீக்க‌ள் 
போல‌,
அவைக‌ளில் 
தேனும் 
உண்டு,
கொடுக்கும் 
உண்டு...!

வியாழன், 19 ஏப்ரல், 2012

பொய்


காயப்படுத்தும்  
உண்மையை 
விட ,
குணப்படுத்தும் 
பொய்யே 
மேலானது ...

புதன், 4 ஏப்ரல், 2012

மௌன புன்னகை .

பிரச்சனைகளில் 
இருந்து 
விலகி 
இருக்க 
சிறந்த 
வழி 
மௌனம், 
பல 
பிரச்சனைகளை 
தவிர்க்க 
மிக 
சிறந்த 
ஆயுதம் 
புன்னகை .

வியாழன், 1 மார்ச், 2012

அன்பு

அன்பைப் 
பகிர்ந்து 
கொள்வது 
வாழ்க்கையில் 
மிகப் பெரிய 
சந்தோசம்.

சோம்ப‌ல்


சுறுசுறுப்புக்கு 
எல்லா 
வேலைகளும் 
எளிது. 
சோம்பலுக்கு 
எல்லாமே 
கடினம்.

திங்கள், 6 பிப்ரவரி, 2012

துன்பங்கள்


துன்பங்கள் 
நிலையானவை 
அல்ல; 
அவை 
ஆற்றில் 
ஓடும் 
தண்ணீர்
போல் 
ஓடிவிடும்...

வியாழன், 26 ஜனவரி, 2012

"நாணயம்"


மனிதன்னா 
"நாணயம்" 
வேண்டும்!
மனிதன் 
வாழனும்னா 
"நாணயம்" 
வேண்டும்! 
"நா" நயம் 
இல்லாமல் 
வாழ்ந்திடலாம் ! 
ஆனால்
"நாணயம்" 
இல்லாமல் 
வாழமுடியாது..!

சிற்பம்


வாழ்க்கை 
என்பது 
ஓவியம்மல்ல, 
மாறி மாறி 
வரைய !
வாழ்க்கை 
என்பது 
சிற்பம் 
செதிக்கினால் 
செதிக்கியதுதான் ..!

திங்கள், 23 ஜனவரி, 2012

கண்ணீர் மழை...!


உண்மையான 
அன்பு 
இருப்பவருக்கு 
மட்டுமே 
உன் 
கண்ணீர் 
துளிகள் 
தெரியும் 
நீ 
மழையில் 
நின்று 
அழுதால் கூட ...!

புதன், 18 ஜனவரி, 2012

வாய்+ப‌ண‌ம்




உனது 
வாயையும்,
பணத்தையும் 
கவனமாக திற!
அப்போதுதான் 
இரண்டிற்கும் 
நல்ல 
மதிப்பிருக்கும்.

தனிமை



உயர்ந்த 
எண்ணணம் 
கொண்டவர்களுக்கு 
தனிமை 
என்பதே 
இல்லை...

செவ்வாய், 3 ஜனவரி, 2012

சிரிப்பு



உன் 
வேதனை 
பலரை 
சிரிக்க 
வைக்கலாம். 
ஆனால், 
உன் 
சிரிப்பு 
ஒருவரைக் 
கூட 
வேதனைப்படுத்த 
கூடாது.

பாதை


நீ 
நடந்து 
போக 
பாதை 
இல்லையே 
என்று 
கவலைப் படாதே, 
நீ 
நடந்தால் 
அதுவே 
ஒரு 
பாதை.

தவம்



ஊசி 
முனையில் 
தவம் 
செய்தாலும் 
உன்னதுதான் 
கிட்டும் ..

உலகம்

உலகத்திற்கு 
வேண்டுமென்றால் 
நீங்கள் 
ஒரு 
ஆளாக 
இருக்கலாம்; 
ஆனால் 
யாராவது 
ஒருவருக்கு 
நீங்களே 
உலகமாக 
இருக்கலாம். 

திங்கள், 2 ஜனவரி, 2012