வெள்ளி, 23 ஜூன், 2017

தேடல்...



தேடல்...

தொலைத்தலில்
இல்லை …
தேடலில் உள்ளது
வாழ்க்கை ...


வியாழன், 22 ஜூன், 2017

மறதி



மறதி..

துன்பத்திற்கு காரணம்

மறக்கக்கூடாததை மறப்பதும்..

மறக்கவேண்டியதை மறக்காமல் இருப்பதும்தான்...

   

திங்கள், 19 ஜூன், 2017

உண்மையான அன்பு ..



உண்மையான அன்பு ..

உண்மையான அன்பை
சொல்லி புரியவைக்க முடியாது  
அந்த அன்புக்கு
உரியவர்கள் மட்டுமே
உணர முடியும் …!

புதன், 14 ஜூன், 2017

வரம்


வரம்

நம் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் ஆயிரம் உறவுகளை விட .,
நம் கண்ணீரைப் புரிந்து கொள்ளும்
ஒரே ஒரு உறவு கிடைப்பது வரமே ...

செவ்வாய், 6 ஜூன், 2017

வாழ்க்கை


வாழ்க்கை...
                  தானாக உயரும்
                       *வயது*!
                விடாமல் துரத்தும்
                      *காலம்*!!
                 தடுக்க முடியாத
                      *நேரம்*!!!
               கடக்கத் துடிக்கும்
                    *இளமை*!!!!
              காலைத் தடுக்கும்
                    *சமூகம்*!!!!!
               தொடவேண்டிய
                   *இலக்கு*!!!!!!
       இத்தனை போராட்டம் தான்
                 *வாழ்க்கை*!!!!!!!